வாழ்க்கைத் தொழில் பரீட்சை சான்றிதழ்
வாழ்க்கைத் தொழிற்பயிற்சி அதிகார சபையின் மூலம் வழங்கப்படுகின்ற ஒரு சேவையானது தேசிய தொழிற் பரீட்சைகளை நடத்துவதும், தொழிற்பயிற்சித் துறையில் தேசிய சான்றிதழ்களை வழங்குவதுமாகும்.
தான் ஈடுபட்டிருக்கின்ற தொழில் துறையில் பரிந்துரைக்கப்பட்ட ஏற்றுக் கொள்ளப்பட்ட சான்றிதழைப் பெற்றுக்கொள்வதற்குத் தேவையான எந்தவொரு நபருக்கும் உரிய தொழிற் பரீட்சைகள் நாட்டின் அனைத்துத் தொழிற்பயிற்சி நிலையங்களிலும் நடைபெறுகின்றன. வெளிநாட்டு தொழில்களில் ஈடுபட விண்ணப்பிக்கின்றவர்களுக்காக உரிய தொழில் பரீட்சைகளை ஒரு நாளுக்குள் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வாழ்க்கைத் தொழிற் பரீட்சைகளும் சான்றிதழ்கள் வழங்கும் செயற்பாடும் பின்வரும் நோக்கங்களைக் கொண்டிருக்கிறது.

- நிபுணத்துவ ஊழியர்களுக்காகத் தரக் கட்டளைகளைத் தயாரித்தல்.
- களத்தில் உரிய நிபுணத்துவ ஊழியர்களைத் தெரிவு செய்வதற்கு உதவுதல்.
- குறிப்பாக, முறையான பயிற்சியைப் பெறாத, தான் ஈடுபட்டிருக்கின்ற துறையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தொழில் வரவேற்பைப் பெற்றுக் கொள்ளத் தேவையுள்ள நபர்களுக்கு உரிய வசதிகளைச் செய்து கொடுத்தல்.
- வாழ்க்கைத் தொழிற்பயிற்சித் துறையில் எதிர்பார்க்கும் அபிலாiஷகளை நிறைவேற்றுகின்ற ஒருமுகத் தன்மையை ஏற்படுத்துதல்.
தேசிய தொழில் தகைமை சான்றிதழ் (NVQ)
பல்வேறு வாழ்க்கைத் தொழில் நிபுணத்துவத்தில் உள்ள சிறப்பறிவை அளந்தறிவதற்காகத் தேசிய தொழில் தகைமை திட்டமிடப்பட்டுள்ளது. வெளிக்களத்துடன் சம்பந்தப்பட்ட உலகளாவிய திறமைகளைக் கொண்ட இலங்கை உழைப்பு செயலணியொன்றை உயர் தரத்திலான தொழில் நுட்பம் மற்றும் தொழிற் கல்வியினூடாக உருவாக்குவதே தேசிய தொழில் திறன் (NVQ) மூலம் எதிர்பார்க்கப்படும் நோக்கமாகும்.
நாடு முழுவதிலும் அமைக்கப்பட்டுள்ள தமது நிலையங்களில் வாழ்க்கைத் தொழிற்பயிற்சி சான்றிதழ் பாடநெறிகளை நடத்துவதற்கும் பூர்வாங்க கல்வியை ஏற்றுக்கொள்ளும் (RPL) சான்றிதழை வழங்குவதற்கும் இலங்கை வாழ்க்கைத் தொழிற்பயிற்சி அதிகார சபைக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
தேசிய வாழ்க்கைத் தொழிற்பயிற்சி (NVQ) நிகழ்ச்சித் திட்டத்தின் எதிர்பார்ப்பு வருமாறு,
- வாழ்க்கைத் தொழில் நிபுணத்துவங்களைத் தேசிய ரீதியாகவும் சர்வதேச ரீதியாகவும் ஏற்றுக்கொள்ளும் நிலைக்குள்ளாக்குதல்.
- சந்தைத் தேவைகளுக்கு ஏற்ற வகையில் வாழ்க்கைத் தொழிற்பயிற்சியை வழங்குதல்.
- NVQ மூலம் வழங்கப்படுகின்ற சான்றிதழ்களுக்கு வரவேற்பை ஏற்படுத்துதல்.
- சர்வதேச ரீதியாகப் போட்டியிடக் கூடிய இலங்கை உழைப்பு செயலணி ஒன்றை உருவாக்குதல்.