• default color
  • green color
  • blue color
Sinhala (Sri Lanka)English (United Kingdom)
Skills for Livelihood, Employability for Skills
முகப்பு புதிய செய்திகள் தகவல் தொழில்நுட்ப எழுத்தறிவை மேம்படுத்துவதற்காக வாழ்க்கைத் தொழிற்பயிற்சி

தகவல் தொழில்நுட்ப எழுத்தறிவை மேம்படுத்துவதற்காக வாழ்க்கைத் தொழிற்பயிற்சி

தகவல் தொழில்நுட்ப எழுத்தறிவை மேம்படுத்துவதற்காக வாழ்க்கைத் தொழிற்பயிற்சி, தம்மிக்க ஹேவா பத்திரண தலைவர்/த.நி.உ., இலங்கை வாழ்க்கைத் தொழிற்பயிற்சி அதிகார சபை.

1995ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க இலங்கை வாழ்க்கைத் தொழிற்பயிற்சி சட்டத்தின் அணுகுமுறையின் பிரகாரம் இலங்கை வாழ்க்கைத் தொழிற்பயிற்சி அதிகாரசபை (VTA) அதன் 270 நிலையங்களினூடாக குறிப்பாக கிராமிய இளைஞர்களுக்கு தொழிலை நோக்கமாகக் கொண்ட வாழ்க்கைத் தொழிற்பயிற்சியை வழங்குவதற்காக அமைக்கப்பட்டது. கடந்த சில வருடங்களில் VTA மூலம் தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு கற்கை நெறிகள் வழங்கப்பட்டன. தற்பொழுது 25000 மாணவர்கள் VTA யின் தலைவரும் தலைமை நிறைவேற்று உத்தியோகத்தருமான தம்மிக்க ஹேவா பத்திரண அவர்களுடன் நடத்தப்பட்ட நேர்காணல் கீழே தரப்படுகிறது.

கேள்வி - ஒருவர் தனியார் நிறுவனமொன்றுக்குப் போகாமல் வாழ்க்கைத் தொழிற்பயிற்சிக்காக VTA வை தெரிவு செய்வது ஏன்?
பதில் - சம்பளத்துடன் சுயதொழில் ஒன்றை அல்லது திறனை இளைஞர்களுக்கு வழங்குவதற்கு வழியமைத்துக்கொள்வது மற்றும் அதன்மூலம் நாட்டின் அபிவிருத்திக்குப் பங்களிப்புச் செய்வது எமது நோக்கமாகும்.

எமது பாடநெறிகள் தாங்கிக்கொள்ளக்கூடிய நியாயமான கட்டணங்களின் கீழ் நடத்தப்படுகின்றன. மேலும் அவை வேறெந்த தனியார் நிறுவனங்களிலுமில்லை. அத்துடன் அவை உள்ளூர் ரீதியாகவும் சர்வதேச ரீதியாகவும் ஏற்றுக் கொள்ளக்கூடிய நிலையில் இருக்கின்றன.

நாடு முழுவதிலும் அமைக்கப்பட்டுள்ள 90 நிலையங்களில் நடைபெறுகின்ற மாபெரும் கணினி கல்வி வலையமைப்பு எம்வசமிருக்கிறது.

அளவில் மட்டுமல்ல அதன் நிலையைக் கவனத்திற்கொள்கின்ற போது அரசு ஏற்றுக்கொள்ளக்கூடிய பாடநெறிகளை நடத்துகின்ற ஒரே நிறுவனம் எமது நிறுவனமாகும். VTA மூலம் பெற்றுக்கொள்கின்ற தேசிய வாழ்க்கைத் தொழில் திறன் சான்றிதழ் சர்வதேச ரீதியாகவும் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. அதுமாத்திரமல்ல, பல்தேசிய தகவல் தொழில்நுட்ப ஜாம்பவானான மைக்ரோ சொப்ட் நிறுவனம் இலங்கையில் வேறு எந்தவொரு நிறுவனமும் உரிமை பெறாத மைக்ரோ சொப்ட் உயர் கல்வி பீட நிலையை எமக்கு வழங்கியுள்ளது. இந்நிலையைக் கொண்டுள்ள நிறுவனங்கள் அகில இந்தியாவிலும் நான்கு நிறுவனங்கள் தான் இருக்கின்றன.

அத்தகைய பாரிய நிறுவனமான ஊஐளுஊழு கம்பனியின் சான்றுபெற்ற இலங்கையின் கற்கை பீடங்கள் மூன்றில் ஒன்று எமது நிறுவனமாகும்.

இலங்கையில் இப்பொழுது இருக்கின்ற CISCO சான்றிதழ் பெற்ற ஐந்து போதனாசிரியர்களில் இருவர் எமது நிறுவுனத்தில் சேவையாற்றுகின்றனர். மேலும் ADOBE கற்கை பீடத்தையும் இலங்கையில் அமைக்கும் பணியில் நாம் ஈடுபட்டிருக்கின்றோம். தற்பொழுது இலங்கையில் ADOBE பாடநெறியை நடத்துகின்ற ஏனைய நிறுவனங்கள் உரிய சான்றிதழ்களைப் பெறவில்லை. அத்துடன் இலங்கையில் உள்ள ஒரே ADOBE கற்கை பீடம் எம் வசமே இருக்கிறது.

பொது மக்களின் கவனம் எம்மீது திரும்பாவிட்டாலும் கூட பெரும்பாலான துறைகளில் சந்தை முதன்மையாளர்களாக இருப்பது நாங்களே. எமது நிலைப்பாடு பாரிய வர்த்தக விளம்பரங்களில் தங்கியிருக்கவில்லை. வாய் மூலம் பரவுகின்ற புகழில் தான் தங்கியிருக்கின்றது. அரச கொள்கைகளைப் பின்பற்றி தகவல் தொழில்நுட்ப அறிவைப் பொருத்தமான முறையில் விரிவாக்கும் பணியில் நாம் உதவி வருகின்றோம். நீண்டகால ரீதியில் கவனத்தில் எடுத்துக்கொள்கின்ற போது எமது பாடநெறிகளைப் பூர்த்தி செய்த மாணவர்களுக்கு தகவல் தொழில்நுட்பம், வியாபார செயற்பாட்டு வெளிவளங்கள் (BPO) என்ற பிரிவுகளில், ஏனைய நிறுவனங்களில் பாடநெறிகளைக் கற்ற மாணவர்களுக்கு இருப்பதைவிட அதிக வாய்ப்பு இருக்கின்றது.

இதன் பெறுபேறாக இலங்கை அரசுக்கு தகவல் தொழில்நுட்ப நிபுணர்களைக் கொண்ட பொதுச் சேர்மத்தை உருவாக்குவதற்கும் அதன்மூலம் ஏனைய நாடுகளுடன் தகவல் தொழில்நுட்பத் தொழில்களைப் பெற்றுக்கொள்வதற்குப் பேச்சுவார்த்தை நடத்துகின்றபோது மிக உறுதியானதொரு நிலைப்பாடு பெற்றுக் கொள்ளப்படும்.

இவ்விதமான புதிய தொழில் வாய்ப்புகளினூடாக இலங்கையர்களுக்கு மிகச் சிறந்த நிலையொன்று உறுதிப்படுத்தப்படும். தற்பொழுது நாம் கல்வி அமைச்சுடன் இணைந்து பாடத்திட்ட அபிவிருத்தி தொடர்பான பணிகளில் ஈடுபட்டிருக்கின்றோம். இதற்கான உரிய புரிந்துணர்வு உடன்படிக்கையில் அண்மையில் கையொப்பமிடப்படும். க.பொ.த. சா / தரத்தில் தகவல் தொழில்நுட்ப பாடத்தைக் கற்கின்ற சுமார் 40,000 மாணவர்கள் நாட்டில் இருக்கின்றனர். மேலும் சுமார் 1000 மாணவர்கள் தகவல் தொழில்நுட்பப் பாடத்தை உயர் தரத்தில் கற்கின்றனர். ஏற்கனவே பாடசாலைகளில் சுமார் 2000 கணினி விஞ்ஞான கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதன் நோக்கம் தகவல் தொழில்நுட்பப் பாடத்தை வாழ்க்கைத் தொழிலாகத் தெரிவு செய்கின்ற, பாடசாலையை விட்டுச் செல்கின்றவர்களுக்கு வாழ்க்கைத் தொழிலுக்கு வழிகாட்டுகின்ற செயல் முறையொன்றைத் தயாரிப்பதாகும். இதற்காக எதிர்காலத்தில் பட்டப்படிப்புக்கான பாடநெறிகளை நடத்துவதற்குப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் சான்றுரையைப் பெற்றுக்கொள்வது எமது திட்டமாகும்.

கேள்வி - தகவல் தொழில்நுட்பத் துறையில் நீங்கள் வழங்குகின்ற மாற்றுப் பயிற்சி வாய்ப்புகள் யாவை?
பதில் - வாழ்க்கைத் தொழிற்பயிற்சி நிறுவனம் என்ற வகையில் நாம் வன்பொருள், மென்பொருள் என்ற இரு பிரிவுகளிலும் பயிற்சிநெறிகளை நடத்தகின்றோம். இவை நாடு முழுவதிலும் 270 நிலையங்களில் நடைபெறுகின்றன. இவற்றிற்கிடையே 68 நிலையங்களில் தேசிய டிப்ளோமா நிலை வரையிலான பாடநெறிகள் நடைபெறுகின்றன. உள்ளூர் சான்றிதழ்களுக்கு மேலதிகமாக Adobe, Sisco, Microsoft போன்ற சர்வதேச சான்றிதழ்களுக்கான பாடநெறிகளும் நமது நிலையத்தில் நடைபெறுகின்றன. இத்தகைய பாடநெறிகளைக் கற்றவுடன் குறைந்த பட்சம் ரூ. 200,000/- பெறக்கூடிய தொழிலொன்றுக்கு உங்களுக்கு வாய்ப்பு ஏற்படும். தற்பொழுது கிரபிக் உருவாக்கம், அச்சிடல், அச்சிடலுக்கு முந்திய பிரிவுகள் போன்றவற்றில் நுண்ணறிவுடையோருக்கான கேள்விகள் வளர்ந்து கொண்டிருக்கின்றன.

கேள்வி - அத்தகைய பாடநெறிகளுக்கு சேர்த்துக்கொள்ளும் தகைமை நடவடிக்கை முறை யாது?
பதில் - பதில் - பாடசாலைக் கல்வியை முடித்த மாணவர்களுக்கு கணினி மென்பொருள், வன்பொருள் தொடர்பாக கவர்ச்சிகரமான பணத்திற்கு தகைமையைப் பெற்றுக்கொடுப்பதாகும். இப்பாடநெறிகளைக் கற்று முடித்த பின்னர் குறைந்த பட்சம் ரூ. 20,000/- போன்ற மாதச் சம்பளமொன்றைப் பெற்றுக்கொள்ளக்கூடிய தொழில் வாய்ப்புகள் இலகுவாகக் கிட்டும். கிரபிக் உருவாக்க நுண்ணறிவாளர்களுக்கு, அச்சிடுபவர்களுக்கு அச்சிடுவதற்கு முந்திய பணிகள் தொடர்பான பிரிவுகளுக்குக் கேள்விகள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன.

கேள்வி - மாணவர்கள் தொழில் பெற்றுக்கொள்வதற்கு நீங்கள் உதவுவீர்களா?
பதில் - நாம் எதிர்காலத்தில் தொழில் தகவல்கள் அடங்கிய இணையத் தளமொன்றை ஆரம்பிக்கவிருக்கின்றோம். இதில் தொழில்கள் பற்றிய தகவல்களுடன் பயிற்சியை முடித்துவிட்டு தொழிலை எதிர்பார்க்கின்றவர்கள் சம்பந்தப்பட்ட தகவல்களும் இதில் அடங்கும்.

கேள்வி - நீங்கள் தகவல் தொழில்நுட்பக் கல்வியை வழங்குவததை எப்பொழுது ஆரம்பித்தீர்கள்?
பதில் - அது பல காலமாக எமது நிகழ்ச்சி நிரலில் இருந்தது. ஆயினும், கடந்த ஆறு ஆண்டு காலப்பகுதியில் கிடைத்துக்கொண்டிருக்கின்ற ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) நன்கொடையுடன், குறிப்பாக கிராமத்து இளைஞர்களை இலக்காகக் கொண்ட கணினிக் கல்வியை ஒழுங்கு முறையாக எம்மால் வழிப்படுத்த முடிந்தது. அதற்கு முன்னர் எமது நிலையங்கள் அடிப்படைத் தகவல் தொழில்நுட்பக் கல்வியை இலக்காகக் கொண்டிருந்தன.

கேள்வி - நீங்கள் நடத்துகின்ற பாடநெறிகள் யாவை?
பதில் - தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் தொடர்பாக அடிப்படை அறிவுள்ள மாணவர்களுக்காகத் திட்டமிடப்பட்டதாகும். தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் (ICT) தொடர்பான தேசிய டிப்ளோமா (NDICT) இது ICT அனைத்து துறைகளையும் உள்ளடக்குகின்ற ஒரு வருட முழுநேரப் பாடநெறியாகும். இது ICT பிரிவின் சந்தைக்கு ஏற்புடையதான தொழில்களை இலக்காகக் கொண்ட பாடநெறியாகும். மல்ட்டி மீடியா, Network இணையத்தள உருவாக்கல், Database, கணினி நிகழ்ச்சிகள், கணினி வன்பொருள் போன்ற விடயப் பரப்பை இப்பாடநெறி உள்ளடக்குகிறது.

Adobe Academy என்பது நாம் நடத்துகின்ற இன்னுமொரு பாடநெறியாகும். உங்களுக்கு ஆக்கபூர்வமான பிரிவுகளில் தொழில் செய்ய வேண்டுமானால், நீங்கள் Adobe உடன் வேலை செய்யவும், அதன் தொழிற்பாட்டு துணைப் பாகங்களைப் பற்றிப் படிக்கவும் வேண்டியிருக்கும். அத்துடன் கணினி விளையாட்டு, அசையும் படங்களைப் பதித்தல், கிரபிக் டிசைன் போன்ற பிரிவுகளில் தொழில்களுக்காக வழிபிறக்கும். CCNA Discovery பாடநெறியின் விடயப் பரப்பில் வலையமைப்பு, ஈடுபடுத்தல், வீட்டில் அல்லது சிறிய அலுவலகங்களில் வலையமைப்பைப் பயன்படுத்திக்கொள்தல் அல்லது மிகவும் சிக்கலான நிறுவன நிலைகளை வலையமைத்தல் போன்ற பிரிவுகள் உள்ளடங்குகின்றன. இதன் மூலம் Routing மற்றும் Switching போன்ற பிரிவுகளில் அடிப்படை அறிவும் SISCO CCNA சான்றிதழ் பரீட்சைகளுக்காகத் தயாராவதற்கும், ஆரம்ப நிலையிலான வலையமைப்புத் தொழில்களில் ஈடுபடுவதற்கும் வாய்ப்புக் கிட்டும்.

CCNA Security பாடநெறியிலிருந்து CCNA நிலையை விஞ்சி தமது அறிவை விரிவுபடுத்திக்கொள்வதற்கும், அதிக கேள்வியுள்ள வலையமைப்புப் பாதுகாப்பு (Network Security) பிரிவில் தொழில் பெறுவதற்கும் உதவியாக இருக்கும். CCNA Security பாடநெறியின் மூலம் ஆரம்ப நிலையிலான கணினிப் பாதுகாப்பு முறைமை தொழிலைப் பெற்றுக்கொள்வதற்கும் சர்வதேச ரீதியாக ஏற்றுக்கொள்கின்ற SISCO CCNA Security சான்றிதழைப் பெற்றுக்கொள்வதற்கும் உதவியாக அமையும்.

இப்பாடநெறி தொழிலை நோக்கமாகக் கொண்ட ஆரம்ப நிலையிலான நிபுணத்துவ அறிவை எதிர்பார்க்கின்ற மாணவர்களை இலக்காகக் கொண்டிருக்கிறது. இவர்களுடன் Routing மற்றும் Switching தொடர்பான அறிவை மேம்படுத்திக்கொள்வதற்கு எதிர்பார்க்கின்ற தகவல் தொழில்நுட்பத் தொழில் செய்வோரும் உயர்கல்வி நிறுவனங்களில் தொழில்நுட்பப் பட்டப்படிப்பில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவர்களும் அடங்குவர்.

கேள்வி - தகவல் தொழில் நுட்பத்துடன் சம்பந்தப்பட்ட பாடநெறிகளை வழங்குகின்ற ஏனைய நிறுவனங்களுக்கும் உங்களுடைய நிறுவனத்திற்கும் இடையிலுள்ள வேறுபாடுகள் யாவை?
பதில் - நாங்கள் ஏற்கனவே கல்வி அமைச்சுடன் இணைந்து நிகழ்ச்சித் திட்டமொன்றில் ஈடுபட்டிருக்கின்றோம். இன்றைய பாடசாலைப் பாடத்திட்டத்தில் தகவல் தொழில் நுட்பம் சேர்க்கப்பட்டிருப்பதனால் க.பொ.த. சா/தரத்தில் அமர்ந்த மாணவர்களை அடுத்து தேசிய தொழில் தகைமை (NVQ) சான்றிதழுக்கு ஈடுபடுத்த முடியும். எங்களுக்குப் பெருந்தொகையான விண்ணப்பங்கள் கிடைத்தாலும், அவர்கள் மத்தியில் 80% பயிற்சிக்காக சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர். இச்சந்தர்ப்பத்தில் இருக்கின்ற வரையறுக்கப்பட்ட வசதிகள் காரணமாக தொடர்ந்தும் வளர்வதற்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. தேசிய சான்றிதழுக்காக 2500 ரூபாவுக்கும் 3000 ரூபாவுக்கும் இடைப்பட்ட ஒரு தொகையை அறவிட எதிர்பார்க்கின்றோம். ஏனைய தனியார் நிறுவனங்களின் அறவீடுகளுடன் ஒப்பிடுகின்றபோது இது மிகவும் கவர்ச்சிகரமான அறவீடாகும்.