அவசரத் தொடர்பு இல : 0117 270 270

புதிய செய்திகள்

எமது நோக்கு

தேசத்திற்கு கைத்தொழில் மற்றும் தொழிற்சார்ந்த அறிவை பெற்றுக்கொடுக்கும் முன்னோடி நிறுவனமாகுதல்.

எமது பணிக்கூற்று

தேசிய மற்றும் சர்வதேச திறன் மட்டத்தில் பயிற்சிபெற்ற நபர்களை உருவாக்கும் அமைப்பொன்றாக செயற்படுதல்.

எமது குறிக்கோள்

 • இளைஞர்களுக்காக தொழிற் பயிற்சி நிகழ்ச்சிகளை தயாரித்து வழங்கி அவர்களுக்கு உரிய ஏனைய நிறுவனங்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வதற்கு திறன்களை பெற்றுக்கொடுத்தல்.
 • தொழிற் பயிற்சி அளிக்கும் நிலையங்கள் கிராமிய பகுதிகளில் ஸ்தாபிப்பதன் ஊடாக இளைஞர்களுக்கு அதன்பால் செல்லுவதற்கு வாய்பளித்தல்.
 • பயிற்சி அளித்தல் விளைத்திறனாகவும் விளைத்திறனாகவும் பெற்றுக்கொடுப்பதற்காக பயிற்சி அளிப்போரை பயிற்சியளிக்கும் நிகழ்ச்சிகளை நடாத்துதல்.
 • திறமைகள் மற்றும் மதிப்பிடுகளை அடிப்படையாயக் கொண்ட இறுதியான மதிப்பீடுகள் செய்யப்பட்ட தேசிய தொழிற் தகைமைகள் மற்றும் ஏனைய திறமை சான்றிதழ் வழங்குதல்.
 • பாடசாலையில் இருந்து விலகியவர்கள் மற்றும் ஏனைய இளைஞர்களுக்கு தொழிற் வழிகாட்டல்களும் மேற்பார்வைகளும் வழங்குதல்.

பெறுமதிகள்

 • மாற்றமடைவதற்காகவுள்ள நெகிழ்வுத்தன்மை.
 • திறமைகள் தேவைகளுக்கு அமைவாக இருத்தல்.
 • முக்கியத்துவத்தை கைப்பற்றுவதற்கு முயற்சித்தல்.
 • சகல மட்டத்திற்குமான பொறுப்பு.
 • உயர்ந்த தரத்திற்கும் நேர்மைக்காகவும் அர்ப்பணித்தல்.
 • குழு உணர்வு.
 • நேர்மை மற்றும் உரிய நேரத்திற்கு வேலை செய்தல் மற்றும் மனிதாபிமான தேவைகளுக்காகவும் ஆண்,பெண் பால் தொடர்பாகவும் கவனம் செலுத்தல்.
 • மாற்றமடையும் சூழலில் பயிற்சி பெறுநர்கள் மற்றும் ஏனையவர்கள் திருப்தியடையும் வகையில் அர்ப்பணித்தல்.

வேலைகள்

 • தொழிற் பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்கள் தயாரித்தல் மற்றும் ஏனைய நிறுவனங்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டு மாணவர்களுக்கு தொழிற் பயிற்சியை பெற்றுக்கொடுத்தல்.
 • TVEC மூலம் தொழிற் பரீட்சை, இறுதி மதிப்பீடுகள் மற்றும் தேசிய தொழிற் தகைமை சான்றிதழ்கள் வழங்குதல்.
 • தொழிற் பயிற்சிகள் மற்றும் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்கள் தொடர்பான ஆராய்ச்சிகளை நடாத்துதல்.
 • தொழில் வழிகாட்டல் மற்றம் ஆலோசனை நிகழ்ச்சித் திட்டங்களை நடாத்துதல்.
 • தொழிற் பயிற்சி நிகழ்ச்சிகளை சிறப்பாகவும் விளைத்திறனாகவும் நடைமுறைப்படுத்த பயிற்சி பெறுநர்களை பயிற்சியளிக்கும் நிகழ்ச்சித்திட்டங்களை நடாத்துதல்.
 • தொழிற் பயிற்சியை பெற்றுக்கொண்ட இளைஞர்களுக்கு மேலும் பயிற்சிகளை பெற்றுக்கொடுத்தல், தொழிலில் அமர்த்துவதற்காகவும் சுயதொழில் ஆரம்பிப்பதற்காகவும் வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்தல்.

14இலங்கை தொழிற் பயிற்சி அதிகார சபையானது 1995 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16 ஆம் திகதி 1995 ஆம் ஆண்டு 12ஆம் இலக்க இலங்கை தொழிற் பயிற்சி அதிகார சபை சட்டமூலத்தின் ஒழுங்கு விதிமுறைகளுக்கமைய ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவர்களின் எண்ணக்கருவொன்று என்பதுடன் அவர் கௌரவ கைத்தொழில் மற்றும் தொழிற் பயிற்சி அமைச்சராக இருந்த காலத்தில் செய்யப்பட்டதொன்றாகும். தொழிற் பயிற்சி அதிகார சபை ஸ்தாபிக்கப்பட்டிருப்பது தங்களை தொழில் தொடர்பான மனிதவலு பிரிவுக்கு அனுப்பும் நோக்கிலேயாகும். அது இலங்கையினுள் பல பிரதேசங்களில் கைத்தொழில் மற்றும் தொழில் கல்வி மற்றும் பயிற்சி பற்றிய நிகழ்ச்சிகள் நடாத்துகின்ற தொழில் திணைக்களத்தின் பயிற்சியளிக்கும் விடயமாக அமைந்தது. இது புதிதாக ஸ்தாபிக்கப்பட்டுள்ள தொழிற் பயிற்சி நிலையமாகியதுடன் அதன் மூலம் கிராமிய இளஞர்களுக்கும் நாட்டின் கஷ்டப்படும் மக்களுக்கும் இலகுவாக கற்கக்கூடிய இடமாக அமைந்துள்ளது.

இலங்கை தொழிற் பயிற்சி அதிகார சபை ஸ்தாபிக்கப்பட்டதன் பிரதான குறிக்கோளாகுவது நாட்டின் ஒட்டுமொத்த மக்களுள் 72% வீதமான கிராமிய மக்களுடன் நெருங்கி அவர்களை இந்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் தொழில்களை பெற்றுக்கொள்ளக் கூடிய திறமையுடையவர்களாக மாற்றுவதற்காகவாகும். தொழிற் பயிற்சி நிலையத்தின் பணிக்கூற்று இலங்கை வாழ் மக்களின் தொழிற் பயிற்சி தேவைகளை நிறைவேற்றுவதற்காக நாடு பூராகவும் சிறப்பு வாய்ந்த தொழிற் பயிற்சி ஒன்றை வழங்குவதாகும். தொழிற் பயிற்சி அதிகார சபையானது சட்டப்பூர்வமான நிறுவனம் ஒன்றாகுவதுடன் இளைஞர் விவகார, கல்வி, கைத்தொழில் அபிவிருத்திகள், ஸ்தாபனக் பிரிவு உள்ளடங்கும் நிதி மற்றும் தொழிலாளர் விடயங்கள் அதன் தவிசாளரினதும் பணிப்பாளர் சபையினதும் நிருவாகத்தின் கீழ் காணப்படும்.88

பணிப்பாளர் சபை மட்டத்தில் காணப்படும் பல்வித பிரதிநிதித்துவம் பயனுள்ள அறிவு மற்றும் அவர் அவர்களின் பல்துறை அனுபவங்கள் வழிவகுக்கின்றது. சபையின் தவிசாளருக்கு சட்டத்திலுள்ள அதிகாரத்தின் பிரகாரம் அதிகார சபையின் பிரதான நிறேவேற்று அதிகாரி ஆவதுடன் திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற் பயிற்சி அமைச்சின் விடயங்களின் கீழ் ஸ்தாபிக்கப்பட்டுள்ள மிகவும் முக்கியமான நிறுவனங்கள் 02 ஆன Tertiary and Vocational Education Commission (TVEC) மற்றும் University of Vocational Technology (UNIVOTEC) ஆகிய நிறுவனங்களின் ஆணைக்குழு அங்கத்தவராகவும் கடமையாற்றுகின்றார். தற்போது தொழிற் பயிற்சி அதிகார சபை கிராமிய தொழிற் பயிற்சி வழங்கும் நிலையங்கள் 224ம், மாவட்ட தொழிற் பயிற்சி வழங்கும் நிலையங்கள் 22 ம் மற்றும் தேசிய தொழிற் பயிற்சி வழங்கும் நிலையங்கள் 7 ம் உள்ளடங்கும் தொழிற் பயிற்சி அளிக்கும் வலயமைப்பில் மிகப்பெறும் பயிற்சி அளிக்கும் நிலையமாக செயற்படுகிறது. இதற்கு 1995 ஆம் ஆண்டில் இருந்தது தொழிற் பயிற்சி அளிக்கும் நிலையங்கள் 31 மட்டுமேயாகும். தொழிற் பயிற்சி அதிகார சபையினால் 18 தொழிற் துறைகளுக்கு தொழிற்கள் 83 க்காக வருடாந்தம் 35000 இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சிகள் பூர்த்திசெய்யப்பட்ட பின்னர் இளைஞர்கள் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தொழில்களுக்காக அனுப்பப்படுவதுடன் தொழில் முயற்சியாளர் பயிற்சியுடன் தனக்கு சொந்தமான சிறு வியாபாரம் ஒன்றையும் ஆரம்பிப்பதற்காக நிதி உதவியும் வழங்கப்படுகின்றது. மேலும் சுயதொழில் ஒன்றை ஆரம்பிக்க எதிர்பார்க்கும் நபர்களுக்கு நிதி உதவி வழங்கும் “ SEPI“ எனும் நிதி உதவி உத்தேச திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

22232433

செய்தி மற்றும் நிகழ்வுகள்

30
ஜன2018

Vocational Training for Disabled Soldiers

A group of more than 170 differently-able Army War Heroes after successfully completing vocational training to qualify for the National Vocational Qualification (NVQ) standards received their certificates during a ceremony...