அவசரத் தொடர்பு இல : 0117 270 270

புதிய செய்திகள்

இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபைக்கு வரவேற்கின்றோம்.

தொழிற்பயிற்சி அதிகாரசபை ஸ்தாபிக்கப்பட்டிருப்பது இலங்கையில் பல பிரதேசங்களில் தொழிற்கல்வி பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்களை மேற்கொண்டு தொழிற்திணைக்களத்தின் பயிற்சி அளிக்கும் விடயமான தொழில் மனிதவலுப்பிரிவின் ஊடாக உங்களுக்கு திறன்களை பெற்றுக்கொடுக்கும் நோக்கத்திலேயாகும். இது தொழிற்பயிற்சி அதிகாரசபை வரை வளர்ச்சியடைந்துள்ளதுடன் அதன் மூலம் கிராமிய இளைஞர்களுக்கும் வசதிகுறைந்த தரப்பினர்களுக்கும் வசதிகளை வழங்குகின்றது.

தேசிய தொழிற் பயிற்சி முறையும் அதன் பின்னணியும்

இலங்கையில் உயர்கல்வி முறையின் கீழ் கலை, விஞ்ஞானம், வர்த்தகம், மற்றும் ஏனைய சகல துறைகளிலும் முதலாவது பட்டம் வழங்கப்படுவது பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கீழ் என்பதுடன் அவ்வாறு செய்யப்படுவது பல்கலைக்கழகம் அல்லது வழங்கும் நிறுவனத்தை பற்றி பார்க்காது சமநிலையையும் அங்கீகாரத்தையும் பேணுவதற்காகவே. கல்விக்கான இந்த செயற்பாடு இலங்கையினுள் சிறந்தமுறையில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. உண்மையிலேயே கல்விசார் கல்வி தொழிற்சார் அல்லது தொழிலை குறிக்கோளாகக் கொண்ட ஒன்று அல்ல என்பதுடன் அது ஆராய்ச்சி மற்றும் குறித்த உயர்கல்விற்காகவே எவ்வாறாயினும் துரதிஸ்டவசமாக இலங்கையினுள் அரச பல்கலைக்கழகங்கள் இல்லாமை காரணமாக கல்விசார் கல்வி மட்டுப்படுத்தப்படுவது உச்சளவில் உயர்தரம் பூர்த்தி செய்தவர்களுள் 10% - 15% வீதமானவர்களுக்கேயாகும்.

உயர்தரப்பரீட்சையின் பெறுபேறுகள் வெளியான பின்னர் மாணவர்கள் 200,000 க்கு அதிகமானவர்கள் மற்றும் சாதாரண தரம் சித்தியடையாத மாணவர்கள் 100,000 க்கு அதிகமானவர்களும் உயர்மட்ட தகமைகளை பெற்றுக்கொள்வதற்கான உரியவழி இல்லாத காரணத்தால் அல்லது வேலைத்தளங்களில் எதிர்பார்க்கின்ற திறன்களை பெற்றுக்கொள்ளும் உரியவழி இல்லாத காரணத்தால் துயரப்படுவதாக தெரியவந்துள்ளது.

மேற்படி நிலைமையின் அடிப்படையில் மாணவர்கள் பலர் அவர்களின் வாழ்க்கையில் பெறுமதியான காலத்தை வீணாக்கி மற்றும் அவர்கள் கல்விசார் கல்வியில் அதிக ஆர்வம் காட்டாத போதிலும் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றி களைப்படைகின்ற மாணவர்கள் சிறிய சம்பளத்திற்கு பயிற்ப்படாத தொழிற் சந்தைக்குள் நுழைகின்றனர்.

மேலே கலந்துரையாடப்பட்ட பிரச்சனைகளில் இருந்து மீள்வதற்காக மூன்றாம்நிலை மற்றும் தொழிற்கல்வி ஆணைக்குழு (TVEC) 07 மட்டங்களைக் கொண்ட தேசிய தொழிற்தகைமைகள் (NVQ) அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. (NVQ) இல் 07வது மட்டம் முதலாவது பட்டம் தகைமைக்கு சமமானதாகும். மற்றைய எந்தவொரு முதலாவது பட்டத்தைப் போன்று NVQ 07 ஆம் மட்டத்தை பூர்த்தி செய்த பின்னர் மாணவர்கள் விஞ்ஞான முதுமானி அல்லது வேறு எந்தவொரு பட்டபின்படிப்பையும் கற்கலாம். NVQ 05 ஆம் மட்டம் சித்தியடைந்தவர்களுக்கு தமது பல்கலைக்கழகத்தில் 02 ஆம் ஆண்டுக்காக நுழையலாம்.

கல்விசார் தகமை பற்றி கவனத்தில் கொள்ளும் போது உயர்தரம் முடிவுற்ற உடன் தொழிலை எதிர்பார்ப்பவர்களுக்கு NVQ திட்டமிடப்பட்டுள்ளது. NVQ செயற்பாட்டில் விசேடத்துவமானது, இன் தகைமை எல்லா மட்டத்திலும் பூர்த்தி செய்தபின்னர் கல்விசார்துறையில் தகைமை பெறுபவர்களுக்கு மிகவும் அதிகமான சம்பளத்துடன் தொழிற் சந்தைக்கு நுழைவதற்கு தகைமை கிடைக்கின்றது.

தொழிற்பயிற்சி அதிகாரசபை, இளைஞர் விவகார மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சின் கீழ் NVQ முறை மிகவும் சிறப்பாக நடைமுறைப்படுத்தும் பணியில் ஈடுபடுகின்றது.

உலகத்தில் உள்ள பல அபிவிருத்தி மற்றும் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள் இலங்கையில் காணப்படும் NVQ  முறைக்கு சமமான தொழிற்சார்திறன்களை உறுதிப்படுத்தும் முறை ஒன்றை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆகையால் NVQ முறை அதிகமான நாடுகளில் காணப்படும் முறையாகும். அதன் பிரகாரம் தேசிய தொழிற் தகைமை முறை தகைமைபெற்ற தொழிற்துறையினர்களாக பூகோளமைய தொழிற்சந்தைக்கு நுழைவதற்கு தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இலங்கையில் உள்ள NVQ மட்டங்கள்

NVQ தகைமை பெறுவது எப்படி?

தேசிய தொழிற்தகைமை(NVQ) பெற்றுக்கொள்ளும் இரண்டு வழிகள் இருக்கின்றது.

  • திறன் தரம் பற்றி குறிப்பிடப்படுகின்ற தகைமைகள் தொடர்பாக அவரின் திறமைகள் போதுமான சாட்சிகளுடன் நிருபிப்பதற்கு விண்ணப்பதாரிக்கு முடியும் என்றால் அப்போது அந்த விண்ணப்பதாரிக்கு RPL இன் கீழ் (முந்திய கற்கைகளை அடையாளம் காணுதல்) NVQ சான்றிதழை பெற்றுக்கொள்ளத் தகைமை பெறுகின்றார்.
  • NVQ சான்றிதழ் பெற்றுக்கொள்ளும் அடுத்த முறைதான் குறித்த திறமையை அடிப்படையாகக் கொண்ட பயிற்சி பாடநெறியை (CBT) கற்றுக்கொள்வதாகும். குறித்த விண்ணப்பதாரிக்கு NVQ அடிப்படையாகக் கொண்ட பயிற்சி பாடநெறியை ஆரம்ப தொழிற் பயிற்சி அதிகாரசபையில் மற்றும் NVQ சான்றிதழ் வழங்கும் அதிகாரம் கையளிக்கப்பட்டுள்ள அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் சிலவற்றினுள் கற்கலாம்.

NVQ முறையின் நன்மைகள்

  • NVQ சான்றிதழ் என்பது விடய அறிவை மட்டும் பார்க்கும் சான்றிதழ் ஒன்று அல்ல. அது உங்களுடைய திறமைகள் பற்றிய உறுதிப்படுத்தும் சான்றிதழாகும். அது குறித்த தொழிலின் சிறப்பாக ஈடுபடுவதற்காக உரிய NVQ தரத்திற்கமைவான திறமை உங்களுக்கு உள்ளது என்பது பற்றி எடுத்துக்காட்டும் சர்வதேச ரீதியில் அங்கீகாரம் உள்ள சான்றிதழ் ஒன்றாகும்.
  • தொழில் அதிகரிக்கப்பட்டமையால், அனுபவத்தின் ஊடாகவும் திறமைகளினூடாகவும் திறன் பெற்றுக்கொள்ளப்படுவதுடன் அதன் மூலம் NVQ தகமைகளுக்கு உயர்ந்த நிலையை அடைய வசதிகள் கிடைக்கின்றது.
  • NVQ முறையானது இயலுமையை மதிப்பிடும் முறையொன்று என்பதுடன் அதன் மூலம் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களை  பெற்றுக்கொள்ளக்கூடிய அதிக வாய்ப்புடைய ஒன்றாகும்.
  • திறன் தரங்கள் தயாரிக்கப்படுவது அந்த வேலைத்தளங்களில் தொழிற்துறை ரீதியில் திறமைவாய்ந்த நபர்களின் பங்களிப்பு மற்றும் அனுமதியுடன் என்பதால் வேலைத்தளங்களில் உரிய வேலைகளை மேற்கொள்வதற்கு அந்த இயலுமை போதுமானதாக இருக்கும் ஆகையால் NVQ சான்றிதழ் பெற்றவர்களுக்கு தொழிற்துறையாளர்களாக தொழிற்சந்தைக்கு நுழைவதற்கு இலகுவாக அமையும். NVQ சான்றிதழ் பெற்றவர்கள் வேலை செய்தவண்ணம் இருந்தாலும் உயர்ந்த தகைமைகளை பெற்றுக்கொள்வதற்கு ஆர்வம் காட்டுவதனால் அவர்களின் தொழில் அபிவிருத்திக்கு இந்த முறை தொழில் வழங்குநர்களை ஊக்கப்படுத்தும்.

தொழில் வழங்குனர்களுக்கு கிடைக்கும் நன்மைகள்

  • உரிய வேலைத்தளங்களுக்குரிய தேவையான திறன்களை அடையாளம் கண்டு அவைகளை NVQ தகைமையுடன் சேர்க்கப்படுகின்றது. ஆகையால் NVQ முறையில் சான்றிதழ் பெற்ற விண்ணப்பதாரி நிறுவனத்திலும் தொழிலில் ஈடுபடுத்த சிறப்பாக தகைமை பெறுகின்றார்.
  • NVQ தகைமை எந்தவொரு நிறுவனத்திற்கும் தொழிற்துறையினரை நியமித்து கொள்ளும் பொழுது திறமைகளை அளக்கும் எதிர்கால உபகரணம் மட்டுமல்ல பதவியுயர்வு வழங்கும் போதும் உயர்ந்த சம்பளங்கள் போன்றவற்றை வழங்கும் பொழுது அது பிரயோசனமாக அமையும்.

செய்தி மற்றும் நிகழ்வுகள்

30
ஜன2018

Vocational Training for Disabled Soldiers

A group of more than 170 differently-able Army War Heroes after successfully completing vocational training to qualify for the National Vocational Qualification (NVQ) standards received their certificates during a ceremony...