அவசரத் தொடர்பு இல : 0117 270 270

புதிய செய்திகள்

கெளரவ. அமைச்சர் சந்திமா வீரக்கச்சி
திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற் பயிற்சி அமைச்சர்

கௌரவ அமைச்சரின் செய்தி

இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையானது 1995 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் அதன் பிரதான நோக்கம் கிராமிய மக்களுக்கு திறன்களை பெற்றுக்கொடுப்பதுடன் குறிப்பாக கிராமிய இளைஞர்கள் தொழிலில் அமர்த்தப்படுவதை அதிகரிக்ச் செய்வதுமாகும். திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சியளிக்கும் அமைச்சர் என்ற வகையில் எனது விடயத்துக்குள் உள்ளடங்கும் இந்த அதிகார சபையானது அதன் ஆரம்பத்தில் இருந்து இது வரையிலான நீண்ட பயணம் ஒன்றை வந்துள்ளதுடன் இது தற்காலத்தில் அரச சேவையில் மாபெரும் கைத்தொழில் மற்றும் தொழிற்கல்வி வழங்கும் நிறுவனமாக மாறியுள்ளது. நாடுபூராகவும் உள்ள நிலையங்கள் 245 இன் ஊடாக வருடம் தோறும் இளைஞர்கள் 35,000 அளவில் பயிற்சியளிக்கப்படுகின்றனர் என்பதை நான் மிகவும் மகிழ்சியுடன் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.

கிராமபுரங்களில் பயிற்சி நிலையங்கள் அமைத்ததன் ஊடாக இரண்டு விதமான பிரதிபலன்கள் கிடைத்துள்ளது. அதாவது கிராமிய இளைஞர்களுக்கு தமது நகரங்களில் தான் விரும்பும் தொழிலை பெற்றுக்கொள்ள அதிக வாய்ப்பு கொடுக்கப்படுவதை போன்று கிராமிய பகுதிகளில் நிறுவப்பட்டுள்ள வேலைத்தளங்களுக்கு தேவையான பயிற்றப்பட்ட ஊழியர்களின் தேவை பூர்த்தி செய்யப்படுதல். நான் அளவை விட தரத்தை பற்றி நம்புகின்ற ஒருவர். இந்த வேலைகளை செய்துகொள்வதற்காக கைத்தொழில் மற்றும் தொழிற்கல்வி மற்றும் பயிற்சி (TVET) வேலைத்தளத்துடன் இணைந்து நெருங்கிய தொடர்பொன்றை பேண வேண்டும். இதற்காக முன்னோக்கி பயணிக்கின்ற ஒரு பாதை என்னவெனில் எமது செயற்பாட்டை சிறப்பாக்கி கொள்ள பிரத்தியேக பொதுமக்கள் தொடர்பை ஆரம்பிப்பதாகும். தொழிலில் அமர்த்தலை மேம்படுத்தும் உன்னத நோக்கத்துடன் (TVET) பிரிவினால் வழங்கப்படுகின்ற பயிற்சியின் தரத்தை மேம்படுத்துவதற்காக என்னால் கொள்கை ரீதியிலான தீர்மானங்கள் பல எடுக்கப்பட்டுள்ளதுடன் அதன் மூலம் பயிற்சி பெறுபவர்களினால் பெற்றுக்கொள்ளப்படுகின்ற திறமைகளை மேம்மேலும் சந்தைப்படுத்த முடியும் (TVET) பிரிவில் உள்ள எல்லோருக்கும் ஆங்கில மொழி மற்றும் சிறு திறன் அறிவு கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. தொழிற் பயிற்சி நிறுவனத்தில் சகல மாணவர்களுக்கும் நவீன தொழில்நுட்ப முன்னேற்றம் பற்றி அறிந்துகொள்வதற்காக தகவல் தொழில்நுட்ப பயிற்சி பெற்றுக்கொடுக்க வேண்டுமென நான் உத்தரவிட்டிருப்பதுடன் இந்த வழிமுறைகள் செய்யப்பட்டிருப்பது எமது பயிற்சி பெறுநர்களுக்கு மிகவும் துரிதமாக வேலையில் அமர்த்தும் நோக்கத்திலாகும். அரசாங்க கொள்கையின்படி சென்று அடுத்த 05 வருட காலத்தினுள் தொழில் வாய்ப்புக்கள் 1,000,000 பெற்றுக்கொடுப்பதற்கு நான் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றேன். அது சம்மந்தமாக உற்பத்தியில் ஈடுபடக்கூடிய இலகுவாக விற்பனையாகக் கூடிய தரத்திலுடைய உயர்ந்த தொழில்படை ஒன்றை ஏற்படுத்தி தேசிய பொருளாதாரத்தை அதிகரிக்கச் செய்யும் பணி தொழிற்பயிற்சி அதிகாரசபைக்கு உள்ளது. பயிற்றப்பட்ட தொழில்படை ஒன்றை அபிவிருத்தி செய்து குறிப்பாக கிராமப்புரங்களின் பொருளாதார அபிவிருத்திக்காக மேலும் அர்ப்பணிப்பதற்கு தொழிற் பயிற்சி அதிகார சபைக்கு முடியும் என்பதை எனது நேர்மையான எதிபார்ப்பு என்பதுடன் அதன் மூலம் வறுமை ஒழித்தல் தொடர்பான பிரச்சனைக்கு தீர்வுகண்டு நாட்டின் வருமானம் தொடர்பான சமநிலையற்ற தன்மையும் குறைப்பதற்கு முடியும் என்பது எனது நேர்மையான எதிர்பார்ப்பாகும்.


கெளரவ. கருணாரத்ன பரணவி
திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற் பயிற்சி

கௌரவ இராஜாங்க அமைச்சரின் செய்தி

அண்மையில் இருந்து வெளிநாடுகளில் பயிற்சித் தொழில் வாய்ப்புக்கள் அதிகரிப்புக்கு சமாந்தரமாக கட்டுமானப்பணி போன்ற வேலைத்தளங்களின் அபிவிருத்திற்கு ஒருங்கிணைவாக பயிற்சிபெற்ற, தகைமைபெற்ற நபர்களாக செல்லுவதற்கு இளஞர்களுக்கு அதிக வாய்ப்பு கிடைத்துள்ளது. பல தொழிற் துறைகளில் தொழிற்பயிற்சி வழங்குதல் காரணமாக இளைஞர்கள் ஆர்வம் காட்டும் துறைகளிலே  தகைமைபெற்று நாட்டின் தொழிற் சக்திற்கு பாங்களிப்பதற்காக தகைமைபெற முயற்சிக்கின்றார்கள். இந்த மிகப்பெறும் தேவையை பூர்த்திசெய்வதற்காக இலங்கை தொழிற் பயிற்சி அதிகார சபை 1995ஆம் ஆண்டு 12 கொண்ட இலங்கை தொழிற் பயிற்சி அதிகார சபைச் சட்டமூலம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதுடன் அன்றுதொட்டு தேசிய தொழிற் பயிற்சி நிறுவனங்கள் 07, மாவட்ட தொழிற் பயிற்சி நிலையங்கள் 26, தொழிற்பயிற்சி நிலையங்கள் 245 உள்ளடங்களாக தேசிய மட்டத்திலான பல நிலையங்கள் ஊடாக பயிற்சிகளை பெற்றுக்கொடுத்து பங்பளறிப்புச் செய்துள்ளது. திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சின் கீழ் உள்ள இலங்கை தொழிற் பயிற்சி அதரிகார சபைக்கு கையளிக்கப்பட்டுள்ள பிரதான பணி தொழிற் பயிற்சி நிகழ்ச்சிகள் ஊடாக இளைஞர்களுக்கு தொழிற் பயிற்சி பெற்றுக்கொடுப்பது மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தகைமைகள் பெற்றுக்கொள்வதற்காக அவர்களுக்கு ஒத்துழைப்பதுமாகும். இதன்போது அவர்களுக்கு தேசிய தொழிற் தகைமை (NVQ) வழங்குவதனால் அது அவர்களுக்கு தொழிற்களை பெற்றுக்கொள்வதற்கு வழிவகுக்கின்றது. இதற்கு மேலதிகமாக தொழிற் பயிற்சி அதிகார சபையினால் தொழிற் பயிற்சி தொழிற் வழிகாட்டல் மற்றும் ஆலோசனைகள் பற்றிய ஆராய்ச்சிகள் மற்றும் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டங்கள் விளைத்திறனாகவும் வினைத்திறனாகவும் நடாத்திச் செல்வதற்காக தனது பயிற்சி அளிக்கும் திறனை வலுப்படுத்தல். இலங்கையின் பொருளாதார அபிவிருத்திற்கு தொழில்முயற்சி பிரதான பங்கை நிறைவேற்றுகின்றது என்பதுடன் எமது இளஞர்களுக்கிடையே  தொழிற்முயற்சி மேம்பாட்டுக்காக தொழிற் பயிற்சி அதிகார சபை மிகப்பெரும் பணியை நிறைவேற்றுகின்றது. ஏனைய அரச நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் , தேசிய மற்றும் சர்வதேச அரச சார்பற்ற அமைப்புக்களுடன் ஒத்துழைப்புடன் செயற்படுவதுடன் அரசாங்கத்தின் ஒட்டுமொத்த தொழிற் பயிற்சி நோக்கத்தை வெற்றிகொள்வதற்கு தொழிற் பயிற்சி அதிகார சபை தனது வேலைகளை மேம்படுத்திக்கொள்வதற்காக செயற்படுகின்றது. இளம் தலைமுறை நாட்டின் சொத்து என்பதை தெளிவாக புரிந்துகொண்டுள்ளது தொழிற் பயிற்சி அதிகார சபை இவர்கள் இந்நாட்டின் எதிர்காலத்தை வழிநடாத்தும் பொழுது மிகவும் பொறுப்புவாய்ந்த பணியை நிறைவேற்றியுள்ளார்கள் என்பதை உறுதிப்படுத்துவதற்காக செயற்படுகிறார்கள். இலங்கை தொழிற் பயிற்சி நிலையங்களுடன் இணைந்து பூகோலமய சூழலினுள் போட்டித்தன்மையை அடைவதற்கு தேவையான திறன்கள் மற்றும் பயிற்சியுடன் சக்தி பெறுங்கள்.


இங்கி. (டாக்டர்). லியோனல் பின்டோ
தவிசாளர், இலங்கை தொழிற் பயிற்சி அதிகாரசபை

தவிசாளரின் செய்தி

அரசதுறையில் கைத்தொழிற் மற்றும் தொழிற்துறை கல்வி மற்றும் பயிற்சி (TVET) வழங்கும் முன்னோடியான நிறுவனம் ஒன்றான இலங்கை தொழிற்பயிற்சி அதிகாரசபை சார்பாக உங்களை வரவேற்கின்றேன். 1995ஆம் ஆண்டு 12ம் இலக்கமுடைய தொழிற்பயிற்சி அதிகார சபை சட்டத்தின் கீழ் ஸ்தாபிக்கப்பட்டுள்ள தொழிற்பயிற்சி அதிகாரசபை கடந்த 20ம் ஆண்டு காலத்தினுள் செயற்பட்டுள்ள தேசிய பொருளாதாரத்திற்கு பெரும்பங்கை ஆற்றியுள்ளது. வருடந்தோரும் தொழிற்பயிற்சி அதிகாரசபை தொழில் பெற்றுக்கொள்வதற்காக தொழிற்துறை திறன்களை வழங்கி இளைஞர்கள் 35,000 அளவில் உருவாகின்றது. அதன் ஆரம்பம் முதல் தொழிற்பயிற்சி அதிகாரசபை நாடுபூராகவும் இளைஞர்கள் 475,000 அளவுக்கு திறன் பயிற்சிகளை வழங்கியுள்ளது. தொழிற் பயிற்சி அதிகாரசபை, தேசிய தொழிற்பயிற்சி நிலையங்கள் (NVTI) 7, மாவட்ட தொழிற் பயிற்சி நிலையங்கள் (DVTC)22, மற்றும் ஏனைய பயிற்சி நிலையங்கள் 216மும் உள்ளடங்கும் பிரதேச செயலாளர் தொகுதி மட்டத்தில் நிலையங்கள் 245மும், இந்த தொழிற்பயிற்சி நிலையத்துக்குள் உள்ளடங்கும் ஒட்டுமொத்தமாக தொழிற் பயிற்சி அதிகாரசபை தொழிற்துறையினர் 18ஐ உள்ளடக்குவதுடன் நிகழ்சிகள் 2178 உள்ளடங்கும் பாடநெறிகள் 79 நடாத்தப்படுகின்றது. இந்த பாடநெறிகளின் காலம் 45 நாட்கள் தொடக்கம் இரண்டு வருடங்கள் வரை காணப்படுகின்றது. நாட்டின் இளைஞர்களுக்காக தொழிற்பயிற்சியை மிகவும் நெருக்கமான ஒன்றாக ஆக்குவதற்கும் அவர்களை உள்நாட்டு மற்றும் சர்வதேச ரீதியாக திறன்படைத்தவர்களாக ஆக்குவதற்கும் மற்றும் தொழில் அமர்த்துவதற்கும் இந்த தொழிற்பயிற்சி அதிகாரசபை அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றது. எமது நோக்கம் என்னவென்றால் பூகோளமய ரீதியில் போட்டிகரமான கைத்தொழிற் தொடர்பாக  அதிக ஆர்வம் காட்டும், தரமான பூகோள படையொன்றை, எமது சேவைகளையும் வசதிகளையும் உயர்ந்த நிலையில் தக்கவைத்துக் கொண்டு உலகளாவிய ரீதியில் தொழிலில் அமர்த்துவரை நோக்காகக் கொண்டு, தொழிற் பயிற்சியையும் கல்வி சம்மந்தமான நவீனமுறையையும், தொழிநுட்பத்தையும் பயன்படுத்தி நபர்களை திறமைபடைத்தவர்களாக வளர்ச்சியடையச் செய்வதாகும்.

சந்தையின் தேவைகளை அடையாளம் கண்ட பின்னர் தொடர்பாடல், பிணக்குகளை தீர்ப்பது குழுவேலைகள் மற்றும் காலத்துக்கு பொருத்தமான வகையில் பழகுதல் போன்ற தனிப்பட்ட பண்புகள், தைரியம் மற்றும் சிறந்த கருத்துக்கள் போன்றவற்றை ஏற்ப்படுத்தல். மேலும் தொழிநுட்பத்தின் வளர்ச்சியுடன் கலந்து அவர்களை நல்ல அறிவுடையவர்களாக தொழிலில் ஈடுபட வாய்ப்பளித்ததற்காக தொழிற்பயிற்சி அதிகார சபையின் நிலையங்களில் சகல மாணவர்களுக்கும் தகவல் தொழிநுட்பம் பற்றிய பயிற்சி ஒன்று வழங்கப்படுகின்றது.


திரு. திலக் காரியவசம்
உப தவிசாளர், இலங்கை தொழிற் பயிற்சி அதிகாரசபை

உப தவிசாளரின் செய்தி

Content not available


திருமதி. சூலாங்கனி பெரேரா
பணிப்பாளர் நாயகம், இலங்கை தொழிற் பயிற்சி அதிகாரசபை

பணிப்பாளர் நாயகத்தின் செய்தி

பூகோள தொழிற்படைக்காக மனிதவளங்களை பெற்றுக்கொடுக்கும் மிகப்பெரும் அரச கைத்தொழிற் மற்றும் தொழிற்கல்வி மற்றும் பயிற்சி வழங்கும் இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபைக்கு உங்களை வரவேற்கின்றோம். நாடுபூராகவும் பரந்துள்ள பயிற்சி நிலையங்கள் 245 னுள் உள்ள வர்த்தக பிரிவிற்கு வருடாந்தம் இளைஞர்கள் 35,000க்கும் மேற்பட்டோர் சேர்கின்றனர். தேசத்துக்கு தொழிநுட்ப மற்றும் தொழிற்கல்வி மற்றும் பயிற்சியை வழங்குகின்ற முன்னோடி (TVET) ஆகும். கடந்த பல வருடங்களுள் தரம், வரவேற்பு, செயற்பாடுகள், பாடநெறிகளின் எண்ணிக்கை மாணவர்கள் சேர்ப்பு மற்றும் ஆராய்ச்சி நடாத்துவதில் VTA வேகமாக வளர்ச்சியடைந்துள்ளது. நாளுக்கு நாள் அது மாணவர்களினதும், வேலைத்தளங்களினதும் கவனத்தை ஈர்த்துக் கொண்டுள்ளது VTA தனக்கென தனியான பாணியில் விசேட பண்புகள் உள்ளன. பூகோள ரீதியில் போட்டிகரமான வேலைத்தளங்கள் பால் சென்றுள்ள தரமான தொழிற்படையை உருவாக்கி எமது நாட்டிற்கு அபிமானமிக்க எதிர்காலத்தை பெற்றுத்தருவதற்காக தேசிய தொழிற் தகைமைகள் ஊடாக உயர்ந்த தரத்திலான கைத்தொழிற் மற்றும் தொழிற்கல்வி ஒன்றை வழங்குகின்றோம். மேலும் நாங்கள் திறன்மிக்க அறிவு, தலைமைத்துவம் போன்றவற்றை மேம்படுத்துவதற்காக எமது இளைஞர்களுக்கு பயிற்சிகளை வழங்குகின்ற மாணவர்களுக்குள் ஒழுக்கநெறியையும் வளர்த்து எமது பாரம்பரிய பழக்கவழக்கங்களையும் அனுகூலமான சிந்தனையையும் வளர்ப்பதற்காக பங்களிக்கின்றோம். மேலும் திறமை மற்றும் ஐஊவு பங்களிக்கின்றோம். மேலும் திறமை மற்றும் ICT பற்றியும், மொழி அறிவு, தொழிற்முயற்சி இயலுமையும் மற்றும் தனிப்பட்ட திறமைகளை வளர்க்க நாங்கள் நடவடிக்கை எடுக்கின்றோம். நாங்கள் இந்த செய்கின்ற பணி நாங்கள் வாழ்கின்ற இந்த ஒட்டு மொத்த உலகத்திற்கும் நன்மை அளிக்கின்றது என்பது எமது நம்பிக்கையாகும். ஆகையால் தொழிற் பயிற்சி அதிகார சபையில் மாணவர்களாகும் படி நாங்கள் உங்களை அழைக்கின்றோம்.


செய்தி மற்றும் நிகழ்வுகள்

30
ஜன2018

Vocational Training for Disabled Soldiers

A group of more than 170 differently-able Army War Heroes after successfully completing vocational training to qualify for the National Vocational Qualification (NVQ) standards received their certificates during a ceremony...